×

மருதூர் ஆர்ச் பகுதியில் தடுப்புக்கட்டை இல்லாததால் அடிக்கடி விபத்து

சேத்தியாத்தோப்பு, மார்ச் 19: சேத்தியாத்தோப்பு அருகே மருதூர் ஆர்ச் பகுதியில் விபத்து தடுப்புக்கட்டைஇல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு பகுதியில் சென்னை- கும்பகோணம் சாலை செல்கிறது. இச்சாலை அருகில்
வள்ளலார் அவதார இல்லமான மருதூர் கிராமத்திற்கு செல்லும் சாலையும், அதில் வள்ளலார் இல்லம் செல்லும் வழி எனும் பெயர்தாங்கிய ஆர்ச் ஒன்றும் உள்ளது. இவ்வாறான நிலையில் இந்த ஆர்ச் அருகில் செல்லும் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பாசன வாய்க்காலும் செல்கிறது. இதனிடையே வாய்க்காலையும், சாலையையும் இணைக்கும் பகுதியில் விபத்து தடுப்புக்கட்டை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். இப்பகுதி சாலை விக்கிரவாண்டி- தஞ்சை நான்குவழிச்சாலைக்காக விரிவாக்கப்பணியும் நடந்து வருகிறது. பலமுறை இதனைஇங்குள்ளவர்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியும் யாரும் எவ்விதமானநடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்துக்களும் குறைந்தபாடில்லை. அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள வாய்க்காலையும், சாலையையும் இணைக்கும் பகுதியில் விபத்து தடுப்புக்கட்டை அமைத்து எதிர்காலத்தில் விபத்து ஏற்படாமல் தடுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Maradur Arch ,
× RELATED விபத்தில் தொழிலாளி பலி