×

சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கட்டிட பொருட்களால் போக்குவரத்து இடையூறு

கரூர், மார்ச் 19: வடக்குகாந்தி கிராமம் பகுதியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டட பொருட்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் வடக்குகாந்திகிராமம் ராஜாநகர் 8வது குறுக்குத்தெருவில் சாலையின் குறுக்கே மணல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டடபொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இப்பகுதியில் உள்ளது. இங்கு வசிப்போர் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இருசக்கர வாகனங்களில் கூட சென்றுவர சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறின்றி இருக்க கட்டிட பொருட்களை சாலையோரம் கொட்டுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,
× RELATED அடுக்கம்-கொடைக்கானல் மார்க்கத்தில் 95%...