×

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு வெள்ளரி விற்பனை அமோகம்

கரூர், மார்ச் 19: கரூரில் வெயில் வாட்டிவதைப்பதால் வெள்ளரிக்காய் விற்பனை அதிக அளவில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் கடும் வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. இதனால் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இப்போதே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடிக்கிறது. வெப்பத்தை தணிப்பதற்காக குறைந்தவிலையில் கிடைக்கும் வெள்ளரிக்காய்களை அதிக அளவில் வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையோரம் வெள்ளரிக்காய், பிஞ்சுகள் அதிக அளவில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். சிறிய வெள்ளரி ரூ.10, பெரியது ரூ.15 விலையில் விற்பனை செய்கின்றனர். பரமத்திவேலூர் பகுதியில் இருந்து அதிக அளவில் வெள்ளரிக்காய்கள் விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கரூர் சுங்ககேட், திருமாநிலையூர், சர்ச் கார்னர், தாந்தோணிமலை, காந்திகிராமம், இரட்டைகுடிநீர் தொட்டி, வெங்கமேடு பகுதியில் வெள்ளரிக்காய்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்கும் கம்மங்கூழ், தர்பூசணி மற்றும் பழங்களும் அதிக அளவில் விற்பனைசெய்யப்படுகிறது.

Tags :
× RELATED தர்மபுரியில் வால் வெள்ளரிக்காய் விற்பனை அமோகம்