×

கொரோனா அறிகுறி உள்ளதா குளித்தலை நீதிமன்றத்தில் தெர்மாஸ்கேனர் பரிசோதனை


குளித்தலை, மார்ச் 19: குளித்தலை நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என தெர்மா ஸ்கேனர் சோதனை செய்த பிறகே நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மற்றும் குளித்தலை ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் வக்கீல்கள் மற்றும் அலுவலர்களுக்கும் இந்த வைரஸ் குறித்த அறிகுறி தென்படுகிறதா என தெர்மா ஸ்ேகனர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியை குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு நீதிபதி தர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் பாக்யராஜ், தினேஷ் மற்றும் வக்கீல் சங்க தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் நாகராஜன், வக்கீல்கள் பாலன், சின்னசாமி, ராஜு மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : examination ,Thermoscaner ,bathing court ,
× RELATED இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு,...