×

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கரூர் மாவட்டத்தில் தடைமீறி ஆற்றுமணல் அள்ளுவது தடுக்கப்படுமா? கட்டிடம் கட்டுவோர் எதிர்பார்ப்பு

கரூர், மார்ச் 19: கரூர் மாவட்டத்தில் தடையை மீறி ஆற்றில் மணல் அள்ளுவது மீண்டும் தொடர்கிறது. கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றுப் பகுதிகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணல் திருட்டு நடவடிக்கை மேற்கொள்ளாததால் மீண்டும் ஆறுகளில் மணல் எடுக்கின்றனர். உள்ளூர் தேவைக்காக மணல் எடுத்துச் செல்லலாம் என மாட்டு வண்டிகளுக்கு வாய்மொழி உத்தரவினை அதிகாரிகள் வழங்கியிருப்பதாக தெரிகிறது. எனினும் பொதுப்பணித்துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் எடுத்துச் செல்கின்றனர். ஒரு லோடு வண்டி மணல் ரூ.900 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைக்கு எனக்கூறி சிலர் லாரிகளுக்கு மணலை ஏற்றி விடுகின்றனர்.

இரவு நேரங்களில் லாரிகளில் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுகிறது. உள்ளூர் தேவைக்கான மணலை கட்டடம் கட்டுவோரிடம் உரிய ஆவணம் பெற்றுக்கொண்டு நியாயமான விலையில் மணலை விற்பனை செய்ய வேண்டும், வெளிப்படையாக மணல் உள்ளூர் தேவைக்காக விற்பனை செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதுடன் லாரிகளில் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என கட்டடம் கட்டுவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டாக்டர் பிரியா கூறுகையில், நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கூடும் இடங்களில் குறைந்தபட்சம் ஐந்து முறை கிருமி நாசினி ஸ்பிரே செய்யப்படுகிறது. இதனை தெளிக்கும் ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Karur District ,
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை