×

மார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

மார்த்தாண்டம், மார்ச் 19: மார்த்தாண்டம்  அருகே உள்ள பாகோடு பாட்டவிளையை சேர்ந்தவர் தங்கம் (65). இவர் வீட்டின்  அருகே கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர்   ஒருவர், கடையில் இருந்த தங்கத்திடம் சிகரெட் கேட்டுள்ளார். அவர் சிகரெட்டை எடுக்க திரும்பியபோது,  அந்த வாலிபர் தங்கம் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பிடித்த  இழுத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட தங்கம் செயினை பிடித்துக்கொண்டார்.  இதனால் செயின் துண்டாகி ஒரு துண்டு அந்த வாலிபர் கையில் சென்றது. உடனடியாக  அந்த வாலிபர் வேகமாக சென்றுவிட்டார். இது குறித்து தங்கம் மார்த்தாண்டம்  போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

Tags :
× RELATED நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு