×

கொரோனா விழிப்புணர்வு ஆலோசனை குடிநீர் தொட்டியில் கசிவுநீர் தேங்கி சுகாதாரகேடு

கரூர், மார்ச் 19: கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி கிழக்கு காலனி தெரு நெடுஞ்சாலையோரம் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டியில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியில் இருந்து கசிந்து வெளியேறும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தேங்கிக்கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி நெடுஞ்சாலையில் நீர் வழிந்து வருகிறது. கழிவுநீர் தேக்கத்தை போக்கி சுகாதார நடவடிக்கைகளை பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆண்டிபட்டி அருகே தரமற்ற பணியால் தண்ணீர் கசியும் புதிய குடிநீர் தொட்டி