×

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு

பெரணமல்லூர், மார்ச் 19: பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் அதேப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர், அவர்கள் மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3.5 சவரன் நகை திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து, வெங்கடேசன் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Peranamallur ,house ,
× RELATED வாகனம் மோதி விவசாயி பலி