×

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு நகராட்சி நடவடிக்கை

திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்தனர். திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் அறிவுரையின்படி நகராட்சி பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும் தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு நகராட்சி சார்பாக பொதுசுகாதார அறிவிப்பு வழங்கப்பட்டது
அதன்படி, தனியார் பஸ்களின் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக இதற்கென தனி தெளிப்பான்கள் மற்றும் கிருமிநாசினியான லைசால் போன்றவைகள் வாங்கப்பட்டு நகராட்சி அலுவலர்களின் அறிவுரைப்படி கிருமிநாசினி மருந்து பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் தனியார் பஸ்களில் மருந்து தெளித்து அதன் பிறகே பஸ்கள் அனுப்பப்பட்டது மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இரா.ஆல்பர்ட், எஸ்.வினோத் கண்ணா, ஏ.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட பயணிகள் பேருந்து உரிமையாளர் சங்க சேர்மன் கோபால், தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நாராயணன் காந்தி, சங்க நிர்வாக குழு உறுப்பினர் கே.வி.எஸ்.பாபு, இணைச்செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் குணசேகர், ராஜு, சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : bus station ,Thiruvannamalai ,
× RELATED கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்குக...