×

செய்யாறில் முதியவர் கண்கள் தானம்

செய்யாறு, மார்ச் 19: செய்யாறில் முதியவரின் கண்கள் தானமாக நேற்று முன்தினம் இரவு பெறப்பட்டது. செய்யாறு டவுன் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ருத்ரப்பன்(76), நெசவுத் தொழிலாளி,இவர் வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தாரின் ஒப்புதலின் பேரில் தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் கண் மருத்துவமனை குழுவினர் இறந்தவரின் கண்களை தானமாக பெற்று சென்றனர்.

Tags :
× RELATED 11, 600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய...