×

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஸ்பிக்நகர், மார்ச் 19: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பஸ்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர். தமிழகத்தில்  கிராமப்புற மக்கள், மாணவ, மாணவிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் ஒரு இடத்தில்  இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அரசு பஸ்களையே  பயன்படுத்துகின்றனர். இந்த பஸ்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.  தற்போது கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவரிடம் இருந்து எளிதாக மற்றொருவருக்கு நோய்  தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருமும்  போது அவரின் எச்சில் சிதறல் அந்த மனிதனின் கைகளில் படுகிறது.

பின்னர் அந்நபர்  பஸ்களில் பயணம் செய்தால் அந்நபரின் கைகளில் உள்ள கொரோனா வைரஸ்  பஸ்சின் கைப்பிடிகளில் படியும். பின்னர் மற்றொரு நபர் அந்த பஸ்சின்  கைப்பிடியை பிடிக்கும்போது, அந்த கைப்பிடியில் உள்ள கொரோனா வைரஸ் கிருமி  மற்றொரு நபருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.எனவே, சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரசு பஸ்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பெரும்பாலான  டவுன்பஸ்களின் உள்பகுதியில் ஆண்டுக்கணக்கில் மண் மற்றும்  குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் குக்கிராமம் வரை சென்று திரும்பும் அரசு பஸ்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசுப்  போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ்களின் உள்புறம் உள்ளிட்ட பஸ் முழுவதும்  கிருமிநாசினி தெளிக்கப்படுமா?  என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

Tags : spread ,public ,
× RELATED சென்னையில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: 2000-யை நெருங்கும் ராயபுரம் மண்டலம்