மெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணிடம் சித்ரவதை கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

வைகுண்டம், மார்ச் 19: மெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சிவஞானபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் டென் ஜான்சன் (30). இவருக்கும், நாங்குநேரி பாப்பாகுளத்தைச் சேர்ந்த ரோஸ்லின் ஜான்சிபாய் (28) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு நவ. 2ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் 45 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், ஒரு கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனராம்.
Advertising
Advertising

திருமணத்திற்கு பின்னர் ரோஸ்லின் ஜான்சிபாய் கணவர் குடும்பத்தில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ள நிலையில்,  டென் ஜான்சனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை மனைவி கண்டித்தபோது கூடுதலாக 20 பவுன் நகை வரதட்சணையாக வாங்கிவருமாறு கூறி டென் ஜான்சன் சித்ரவதை செய்தாராம். மேலும் இதற்கு டென் ஜான்சனின் தாய் உள்ளிட்ட குடும்பத்தினரும் உடந்தையாகச் செயல்பட்டனராம்.  இதையடுத்து இதுகுறித்து ரோஸ்லின் ஜான்சிபாய், வைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் டென் ஜான்சன், அவரது தாய் ரோஸ்லின், அண்ணி கெபி, அண்ணன் ஐசக் ஆகிய 4 பேர் மீது  இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: