தம்பதியை போலீசார் தாக்கியதாகக்கூறி ஆர்டிஓ ஆபீசில் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி, மார்ச் 19: கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் தம்பதியை போலீசார் தாக்கியதாகக் குற்றம் சாட்டிய இந்து முன்னணியினர் ஆர்டிஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இந்து முன்னணி கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரையும், இவரது மனைவியையும்  நேற்று முன்தினம் (17ம் தேதி) காலை 11.15 மணிக்கு கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினர். இதன்படி அங்குசென்ற இருவரையும் அங்கு பணியில் இருந்த  பெண் காவலர், எஸ்ஐ இசக்கிராஜா மற்றும் காவலர்கள் சிலர் சேர்த்து  தாக்கியதாகவும், இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர்.
Advertising
Advertising

 போலீசார் தாக்கியதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரியும்  இந்து முன்னணி  சார்பில் நகர பொதுச்செயலாளர் சுதாகரன் தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ  அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு காத்திருப்பு போராட்டம் நடந்தது. பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ விஜயா, இதுதொடர்பாக நேரடி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட இந்து  முன்னணியினர் காத்திருப்பு போராட்டத்தை  பிற்பகல் 2 மணிக்கு நிறைவு செய்தனர்

Related Stories: