மெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் (திமுக) பேசியதாவது: உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்ற எல்லா நாடுகளிலும், அந்த நகரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஒட்டியே அந்த மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் மெரினாவில் கடற்கரையில் அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், ஏராளமான மாரத்தான் போட்டிகளை நடத்தினார். ஆனால், 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, மெரினா கடற்கரையில் மாரத்தான் ேபாட்டிகள் நடத்தப்படுவதற்கு இன்றைக்கு அனுமதிக்கப்படவில்லை.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க சென்னை வருபவர்கள், இந்தியாவின் மிக நீண்ட 13 கி.மீ. நீளமுள்ள மணல் பரப்புள்ள கடற்கரையின் அழகைக் கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக, மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகளை எதிர்காலத்தில் நடத்துவதற்கு விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கு அரசு முன்வருமா? அமைச்சர் செங்கோட்டையன்: பட்டினப்பாக்கம் பகுதியிலேதான் மாரத்தான் ஓட்டங்களுக்கு பயிற்சியளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. மெரினா கடற்கரையை பொறுத்தவரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற ேபாது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் எதற்குமே அனுமதி வழங்க வேண்டுமாலும், காவல்துறையினருடைய அனுமதியை பெற்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, உறுப்பினரின் கோரிக்கை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories:

>