எழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் முன்பு கேட்பராற்று கிடந்த சூட்கேசில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.  எழும்பூர் ரயில்நிலையம் நுழைவு வாயில் முன்பு கேட்பராற்று ஒரு சூட்கேஸ் ஒன்று கிடந்தது. வெகு நேரமாக இந்த சூட்கேஸ் அங்கு இருந்ததால் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற அச்சத்தில் அதன் அருகே பயணிகள் மற்றும்  பொதுமக்கள் யாரும் செல்லாமல் இருந்தனர்.இதுகுறித்து பொதுமக்கள் எழும்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். உடனே அந்த சூட்கேஸ் அருகே யாரும் வரகூடாது என்று தடுப்புகள் அமைத்தனர்.  பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் சூட்கேசை பாதுகாப்பு உபகரணங்களுடன் திறந்து பார்த்த போது, அதில் வெடிகுண்டுகள் எதும் இல்லை என தெரியவந்தது.
Advertising
Advertising

அந்த சூட்கேசில் இரண்டு ஜோடி ஷூ, செல்போன் சார்ஜர் ஒன்று, அரை கிலோ பூந்தி, நேந்தரம் பழம் சிப்ஸ் ஒரு பாக்கெட், வீல் சிப்ஸ் ஒரு பாக்கெட் இருந்தது. இந்த சோதனையின் இடையே சூட்கேசின் உரிமையாளர் வந்து இது என்னுடைய சூட்கேஸ் என்று கூறினார். பின்னர் அந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து செய்து பொது இடங்களில் இதுபோன்று சூட்கேஸ் வைக்க கூடாது என்று கடுமையாக எச்சரித்து போலீசார்  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறது நேரம் எழும்பூர் ரயில்நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: