×

தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில்  தள்ளுவண்டியில் விற்கப்படும் சுகாதார உணவகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு செய்யாமல் உணவுத்துறை அதிகாரிகள் அலட்சியம் கட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோயம்பேடு, நெற்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஓட்டல்களுக்கு நேரடியாக சென்று  கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு செய்கின்றனர். அங்கு அவர்களிடம் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தும்மல் மற்றும் இருமல் சமயங்களில் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துரைக்கின்றனர். மேலும், இதுதொடர்பான துண்டு பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். பெரிய ஓட்டல்களில்  மேஜை, படிக்கட்டின் ஓரங்கள், ஜன்னல் கம்பிகள் போன்ற இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். அடிக்கடி தரையை ‘மாப்’ போட்டு நன்றாக துடைக்கவேண்டும். கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

பெரிய ஓட்டல்களில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்துவரும் உணவுத்துறை அதிகாரிகள் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதி முழுவதும் தள்ளு வண்டியில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாதிப்பை பற்றி கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, “பெரிய ஓட்டல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள் சிறு ஒட்டல் மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. துண்டுப்பிரசுரங்களும் வினியோகிப்பதில்லை. பெரிய  ஓட்டல்களுக்கு சென்று கொரோனா வைரஸ் விழுப்புணர்வு ஏற்படுத்தும் உணவுத்துறை அதிகாரிகள் சுகாதார இல்லாமல் செயல்படும் சிறு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விழிப்புணர்வு செய்யாதது ஏன். எனவே அவர்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்ய வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Restaurants ,Trolley Stores ,
× RELATED கொரோனா விழிப்புணர்வு ஆடியோ சிவகார்த்திகேயன் வெளியிட்டார்