தொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநங்கல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 184, கந்தன்சாவடி சந்தியப்பன் சாலையில் கோதண்டராமர் நகர் 1, 2, 3, 4வது தெருக்களில் மின்னழுத்தம் குறைவாக இருப்பதால், அந்த பகுதியிலே அமைந்துள்ள 500 கிலோ வாாட் மின்மாற்றியை கூடுதல் மின்மாற்றியாகவோ அல்லது புதியதாக ஒரு மின்மாற்றியையோ அமைக்க வேண்டும். மடிப்பாக்கத்தில் குபேரன் நகர், ராஜாஜி நகர், சதாசிவன் நகர் ஆகிய பகுதிகளிலும், வார்டு எண் 169 புழுதிவாக்கத்தில் உள்ள ராம்நகர், அன்னை தெரசா நகர், ராமகிருஷ்ணன் நகர், ராஜூவ்நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும். அமைச்சர் பி.தங்மணி: புழுதிவாக்கம், உள்ளகரம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க இடம் இல்லாதாத காரணத்தால் நங்கநல்லூரில் ஏற்கனவே இருக்கின்ற 33/11 கே.வி.ஏ. துணை மின்நிலையத்தோடு அந்த பகுதிக்கென்று ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது.

அது முடிந்ததும் சீரான மின்சாரம் வழங்கப்படும். எஸ்.அரவிந்த் ரமேஷ்: சென்னை மாநகராட்சியில் உள்ள 14, 15 மண்டலம், 20 வட்டங்கள், ஊராட்சிகளான பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கல், வேங்கைவாசல்,கோவிலம்பாக்கம், மேடவாக்கம் பகுதிகள் இன்றைக்கு வளர்ந்து வருகிற ஊராட்சியாக இருக்கிறது. அந்த பகுதியில் மேலே செல்கின்ற உயரழுத்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, நீண்ட நெடுநாட்களாகின்றன. அந்த பகுதிகள் கடற்கரையை ஓட்டிய பகுதியாக இருப்பதால் மிக விரைவில் சேதமடைகின்றன. சிறிய காற்றுகள் வீசினால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகின்றன. . எனவே, சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பிகளாக மாற்ற வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: மின்கம்பிகளை, புதைவட மின்கம்பிகளாக மாற்ற வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். உங்கள் பகுதிக்கும், ஐ.டி.காரிடார், அடையார் இரண்டுக்கும் சேர்த்து 821 கிலோ மீட்டர் அளவுக்கு 257 கோடி அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் 2021-2022ம் ஆண்டுக்குள் முடிந்து விடும். அது முடிந்தால் இனிமேல் அது ேபான்ற சம்பவங்கள் நிகழாது.

Related Stories: