திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 234 தொகுதியிலும்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய மையங்கள் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில்  நேற்று மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் கொரோனா வைரஸ் முககவசம், கிருமி நாசினி  திரவம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அனிதா  அச்சீவர்ஸ் அகாடமி எனும் அமைப்பை கடந்த ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கணினி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நேற்று மாலை கணினி பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertising
Advertising

இதில் கலந்துகொண்டு  திமுக தலைவர் ஸ்டாலின்  பேசியதாவது: கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய மையங்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 234 தொகுதிகளிலும் அமைக்கப்படும்.  கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் மூலம் ஏராளமான மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும். சமூகத்தில் நலிந்த பிரிவினர்கள் இந்த பயிற்சி மையத்தின் மூலம் பலன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் முக கவசம், கைகளை சுத்தமாக வைத்திருக்க உதவும் கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே. சேகர்பாபு, ரங்கநாதன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கல்யாண பரிசாக கிரிமிநாசினி திரவம்

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற திமுகவைச் சேர்ந்த இல்லத் திருமண விழாவில் நேற்று கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மணமக்களுக்கு கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி திரவத்தை கல்யாண பரிசாக வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகி துரைமுருகன் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: