தாராபுரம் அரசு அலுவலகங்களில் கெேரானா நோய்த்தடுப்பு செயல்முறை விளக்கம்

தாராபுரம். மார்ச் 19:தாராபுரம் அரசு அலுவலகங்களில் கொரோனா நோய்த்தடுத்து குறித்து மருத்துவ குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் செயல்முறைகள் குறித்து தாராபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று செயல்விளக்கம் அளித்தனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளும் முறை பற்றி மருத்துவ குழுவினர் செயல்முறை விளக்கம் அளித்து காட்டினர்.

வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் தேன்மொழி கூறுகையில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது. அருகில் இருப்பவர் நோய் தொற்றுக்கு இலக்கானவராக இருந்தால் அவர் இருமும்போதும், தும்மல் வரும்போதும் அதிலிருந்து வெளியேறும் நீர்த்திவலைகளிலிருந்து கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே நோய் தாக்கம் உள்ளவர்கள் தங்களது முகத்தை துணியால் மூடிக்கொண்டு இருமுவதும், தூங்குவதும் அருகில் இருப்பவருக்கு நோய் பரவாமல் காப்பாற்ற முடியும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதை கண்டறியும் பரிசோதனை மையங்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளன, இங்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் வேறு யாராவது ஒருவர் நோய்த்தொற்று பரிசோதனை செய்கிறேன் என கூறினால் பொதுமக்கள் அவரிடம்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என்றார். தொடர்ந்து துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. விழிப்புணர்வு மற்றும் கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தாராபுரம் வட்டார மருத்துவ குழு டாக்டர்கள் விக்னேஷ், ரம்யா, மருத்துவத்துறை துணை இயக்குனர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசேகரன், செந்தில் கணேஷ் மாலா, நாட்ராயன், துணைத் தலைவர் சசிகுமார், தாராபுரம் நகராட்சி நகர் நலப்பிரிவு சார்பில் நகர்நல அலுவலர் லட்சுமி நாராயணன், துப்புரவு ஆய்வாளர் ராஜ்மோகன் அருண், தர்மராஜ், சங்கர், தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் வேலுச்சாமி, உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ராம்குமார் , சுகாதார ஆய்வாளர் ராஜூ உள்ளிட்டோர் தாராபுரத்தில் கிருமி தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: