×

இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

விருதுநகர், மார்ச் 19: விருதுநகரில் என்பிஆர்க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தவ்ஹித் ஜமா அத் சார்பில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். என்பிஆர் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் தமிழகத்தில் 36 இடங்களில் நேற்று சிறை நிரம்பும் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள கிளைச்சிறைச்சாலை முன்பாக தவ்ஹித் ஜமா அத் தலைவர் முஹம்மது ஷபிக் தலைமையில் இஸ்லாமியர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இந்த சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மத்திய அரசு எம்பிஆர் கணக்கெடுப்பை ஏப்.1ல் துவக்க உள்ளது. எம்பிஆர் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் நாட்டில் உள்ள மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அகதிகள் பட்டியலில் இணைக்கப்படுவர். கடந்த 80 நாட்களாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு உடனே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தனர். போராட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர் முஹம்மது ஒலி, மாவட்ட செயலாளர் சிந்தாஷா, மாவட்ட பொருளாளர் ஆஸாத், மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர் அலி, அப்பாஸ், தர்வேஸ் மற்றும் கிளை நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர்.

Tags : Islamists ,
× RELATED திருச்சியில் பள்ளி வாசலில் முகப்பை...