×

ஊத்துக்கோட்டை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஊத்துக்கோட்டை, மார்ச் 19:  ஊத்துக்கோட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் ஜெ.ஜெ. நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததது. அதன்பேரில் எஸ்.ஐ வரதராஜன் மற்றும் போலீசார் பாலவாக்கம் ஜெ.ஜெ நகர்  பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தினர்அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர் ஒருவர் காசு கொடுத்து கஞ்சா கேட்டுள்ளார். அப்போது, பணத்தை பெற்றுக்கொண்டு கஞ்சா வழங்கிய வாலிபரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர், பாலவாக்கம் ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த மணி (19)  என்பது தெரிந்தது. பின்னர், அவரை  ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Uduthukottai ,
× RELATED நீர் இளைஞர்கள்!