நடை மேம்பால பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விபத்து அபாயம்

உடுமலை, மார்ச் 19: நடைமேம்பால பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளதால், இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக சாலையின் நடுவில் இரும்புசாரம் அமைத்து, தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரும்பு சாரத்தின் இடைவெளியில் பேருந்துகள் சென்று வருகின்றன. இரும்பு சாரத்தில் நின்று வேலை செய்யும் தொழிலாளர்களை உரசுவதுபோல் கனரக வாகனங்கள் செல்கின்றன. இலேசாக இடித்தாலும் விபரீதம் நிகழும் ஆபத்து உள்ளது. எனவே, பணி முடியும் வரை அருகில் உள்ள சாலை வழியாக கனரக வாகனங்களை திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: