×

வங்கியில் கிருமி நாசினி தெளிப்பு

அருப்புக்கோட்டை, மார்ச் 19: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்நல அலுவலர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களான பழைய, புதிய பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், வழிபாட்டுத் தலங்கள், ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

தொடர் நடவடிக்கையாக வங்கிகளில் ஏடிஎம், கைப்பிடிகள், இருக்கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. லைசால் லிக்யூட் ஸ்பிரே தெளிக்கப்பட்டது. மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள், விழிப்புணர்வு கூட்டம் நடத்தி கைகளை கழுவும் முறை குறித்து அறிவுறுத்தப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Tags : bank ,
× RELATED கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக ஸ்பிரே...