சர்வதேச பார்சல் புக்கிங் ‘கொரோனா’வால் தடை

திருப்பூர், மார்ச் 19: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனா, வியட்நாம் உட்பட அனைத்து நாடுகளுக்குமான சர்வதேச பார்சல் புக்கிங் சேவைக்கு தபால் துறை தடை விதித்துள்ளது. ெகாரோனா நோய் தொற்று தவிர்க்க, வெளிநாடுகளில் இருந்து புக்கிங் செய்து அனுப்பப்படும் இன்டர்நேசனல் பார்சல் சேவைக்கு தடை விதித்துள்ள தபால் துறை, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான பார்சல் சேவையையும் நிறுத்தி வைத்துள்ளது.  இது குறித்து தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய தபால்துறையின் மூலம், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, பார்சல் பட்டுவாடா நடக்கிறது. இதற்கு அடிப்படையே, விமான சேவை தான். தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம், சீனாவில் குறையவில்லை என்பதால், சீனாவுக்கு, ஜூன் 30ம் தேதி வரை, விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சீனாவுக்கான பார்சல் சேவையும் தடைபட்டுள்ளது. நோய் தொற்று தீவிரமடைந்துள்ள அமெரிக்கா, தைவான், வியட்நாம், கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குமான பார்சல் சேவையையும் நிறுத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>