×

ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

பள்ளிப்பட்டு, மார்ச் 19: பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் மீது தீர்வு காண ஏதுவாக  ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனியறை அமைத்து தர வேண்டும் என்று ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்  கேட்டுக்கொண்டார்.ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் செலவு தொடர்பான  கணக்கு விவரங்கள் வாசிக்கப்பட்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற விவாதத்தில்  உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு கிராமங்களில் குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அலுவலகம் இருப்பதுபோல் அந்தந்த பகுதிகளை சேர்ந்த  ஒன்றிய கவுன்சிலர்களை பொதுமக்கள் எளிதாக சந்தித்து அன்றாட பிரச்னைகள் தெரியப்படுத்தவும், தீர்வு காண ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனியறை அமைத்து தர வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஒன்றிய குழு தலைவர் அறையில் ஒரு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமர்ந்திருப்பதல் எதிர் கட்சி உறுப்பினர்கள் அந்த அறைக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமர்ந்து பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க  பொதுவான ஒரு அறை அமைத்து தர வேண்டும். கோடையில் குடிநீர் வறட்சி போக்க உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும் என்று   திமுக ஒன்றிய கவுன்சிலர்  திலகவதி ரமேஷ் வலுயுறுத்தினார். ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா தலைமை  வகித்தார். ஒன்றிய ஆணையர் ஸ்டாலின் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக  பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ, மாவட்ட கவுன்சிலர் ஜெ.பாண்டுரங்கன்  கலந்துக்கொண்டானர்.  மன்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags : rooms ,union committee members ,Panchayat offices ,
× RELATED பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: UGC