அடுத்த கல்வியாண்டுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் தயார்

திருப்பூர், மார்ச் 19:திருப்பூரில் அடுத்த கல்வியாண்டின் முதல் பருவத்திற்கான பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.  அந்த வகையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தவுடன் முதல் நாளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவத்துக்காக வழங்க தேவையான பாடப்புத்தகங்கள் திருப்பூர் வந்து சேர்ந்துள்ளன. அவை அனைத்தும் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதே போல 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க தேவையான காலணிகளும் வந்துள்ளன. அவை அனைத்தும் இதே பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கணித உபகரணபெட்டி வந்துள்ளது. அவை அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள 3ம் பருவத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு

வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: