×

கொரோனா வைரஸ் எதிரொலி கொய் மலர் விற்பனை சரிவு

குன்னூர், மார்ச் 19:  கொரோனா வைரஸ் காரணமாக பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கொய் மலர்கள் தேக்கமடைந்துள்ளதால், விற்பனை சரிந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் மற்றும் கொய் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக கொய் மலர் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கொய் மலர் சாகுபடி விவசாயம் பாதிக்கப்பட்டு பூக்கள் விலை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. இதில் குறிப்பாக லில்லியம் மலர்களில் ஒரு பூவின் விலை ரூ.24ல் இருந்து ரூ.12ஆக குறைந்தது. இதே போல கார்னீஷியன் மலர்கள் ரூ.7ல் இருந்து 50 பைசாவிற்கு குறைந்துளள்து. தற்போது சாகுபடி செய்த மலர்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் வணிக வளாகங்கள், ஷப்பிங் மால்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்ய வாடிக்கையாளர்கள் வருவதில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பூக்கள் தேக்கமடைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...