×

நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மஞ்சூர், மார்ச் 19:   மஞ்சூர் அருகே மின்வாரிய மேல்முகாமில் இருந்து குந்தாபாலம் வரை குறுக்குபாதை அமைந்துள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் இப்பாதையில் சிமென்ட் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மின்வாரிய ஊழியர்கள் பெரும்பாலும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடைபாதையின் இரு புறங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் பொது மக்கள் நடந்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதர் மண்டியுள்ள பகுதியில் கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் நடமாட்டமும் உள்ளது.   இதையடுத்து மேல்முகாமில் இருந்து குந்தாபாலம் வரை நடைபாதையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள், முட்புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் சீரமைக்க கோரிக்கை முன்னாள் படை வீரருக்கு பணி வாய்ப்பு