×

தமிழக எல்லையுடன் அரசு பஸ்கள் நிறுத்தம்

கூடலூர், மார்ச்  19:  நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி,  மானந்தவாடி, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு  பஸ்கள் நேற்று முதல் எல்லைப்பகுதி வரை மட்டும் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பஸ்கள்  எல்லைப்பகுதியான நாடுகாணி, தாளூர், பாட்டவயல் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். தற்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு லாரி போக்குவரத்து  மட்டுமே வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

Tags : border ,Tamil Nadu ,
× RELATED அறந்தாங்கியில் இருந்து திருப்பதி,...