×

கொரோனா விழிப்புணர்வு

ஊட்டி, மார்ச் 19:நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வாசகர்கள் நூலகத்தில் நுழைவதற்கு முன்பாக தங்களது கைகளை நன்றாக சுத்தம் செய்து வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நுழைவு வாயிலில் கை கழுவி வரும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி, முதல் நிலை நூலகர் ரவி ஆகியோர் சுகாதாரமாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட மைய நூலக அனைத்து நூலகர்கள் ,மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் சாந்தபுவனேஸ்வரி, இராபர்ட் ஜான் மற்றும் அனைத்துப் அலுவலக பணியாளர்கள், வாசகர்கள் கலந்து மேற்கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா விழிப்புணர்வுக்காக தஞ்சையில்...