×

2 மகள்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

மதுராந்தகம், மார்ச் 19: மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் தாய், மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (40). மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (35). இவர்களுக்கு திவ்யபாரதி (11), கவி (10) ஆகிய மகள்கள் உள்ளனர். 2 பேரும் மதுராந்தகம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 6 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர்.கடந்த சில மாதங்களாக பார்த்திபன், தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போடுவதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி, பிள்ளைகளை அடித்து உதைத்துள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு, மீண்டும் பார்த்திபன் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலையில் பார்த்திபன் தூங்கி எழுந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லை. நீண்ட நேரமாக வசந்தி மற்றும் 2 மகள்களை காணவில்லை. இதையடுத்து அவர், உறவினர்களுடன் பல இடங்களில் தேடினார். ஆனால், எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையில், அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணறு வழியாக கிராம மக்கள் சென்றனர். அப்போது இளம்பெண் சடலம் விவசாய கிணற்றில் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதபேரில் போலீசார், மதுராந்தகம் தீயணைப்பு துறை மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
அதில், சடலமாக கிடந்தது வசந்தி என தெரிந்தது. தொடர்ந்து மீட்பு படை வீரர்கள், கிணற்றில் நேரம் தேடி 2 சிறுமிகளின் சடலங்களையும் மீட்டனர்.
இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மகள்களுடன், தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், வள்ளலார் நகரை சேர்ந்தவர் லட்சுமி (36). இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த லட்சுமி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று, தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், கணவர் கதவை தட்டினார். திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனே லட்சுமியை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே லட்சுமி இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொரப்பாக்கம் கருணாகர விளாகத்தை சேர்ந்தவர் பிரேமா (36). சித்தாள் வேலை ெசய்து வந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த அருள் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இந்த பிரேமா சித்தாள் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை பிரேமா வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.2வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்டதும் சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பிரேமா, சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட கான்ட்ராக்டர் மற்றும் உரிமையாளரிடம் விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,daughters ,
× RELATED கடன் தொல்லையால் கணவர் மாயம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை