×

காஞ்சி, செங்கை கலெக்டர் அலுவலகங்களில் கொரோனா வைரஸ் புகார்களுக்கு புதிய எண் அறிவிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 19: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெற, புதிதாக கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசூதிகள், தேவாலயங்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் என பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தா–்கள், கோயிலுக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வந்த பின்னரும் கைகழுவும் திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளான மீனாட்சி மற்றும் சவீதா மருத்துவ கல்லூரிகளில் தீவிர நோய் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால, உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும். இளநீா், ஓஆா்எஸ், கஞ்சி போன்ற நீா்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும்.மேலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற கலெக்டர் அலுவலகத்தில் 044-27237107, 044-27237207 செயல்படும் கட்டுப்பாடு அறையினை தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனை, இதர அரசு மருத்துவமனைகள், மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தீவிர நோய் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.zஆட்டோக்கள், பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெற, கலெக்டர் அலுவலகத்தில் 044-27427412, 044-27427414 ஆகிய எண்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி  தலைமையில் 5 அதிகாரிகள்  பணியில் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமாக எந்த நேரத்திலும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அவர்கள், மருத்துவ உதவிகளை அளிப்பார்கள்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு