×

காஞ்சி எஸ்பி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

காஞ்சிபுரம், மார்ச் 19: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எஸ்பி அலுவலகம் எதிரில் காஞ்சிபுரம் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது.இதில், எஸ்பி அலுவலகத்தில் பல்வேறு புகார் மனு கொடுக்க வரும் பொதுமக்கள், எஸ்பி அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோப் வாட்டர், ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தண்ணீர் இல்லாத நேரங்களில் ஹேண்ட் சானிடைஸர் உபயோகிக்க வேண்டும். வீட்டின் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்த வேண்டும். கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய நுழைவாயிலில், போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்களது கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவிட, கிருமி நாசினி மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளி வைக்கப்பட்டது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் கன்னியப்பன், குமார் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பது, வணிக வளாகம், திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்ட அரசின் உத்தரவை பொதுமக்கள், நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வது, தொடர்ந்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களை மேற்கொள்வது, அரசின் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பது, தவறான வதந்திகளை பரவ விடாமல் தடுப்பது ஆகியவை குறித்து பேசப்பட்டது.

Tags : Kanchi SP Office ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...