×

எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆண்டிப்பட்டியில் குடிநீர் பஞ்சம் சட்டசபையில் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 19: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஆண்டிப்பட்டி தொகுதி மகாராஜன் எம்எல்ஏ (திமுக) பேசுகையில்: ஆண்டிப்பட்டி தொகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக இந்த அவையில் ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி கை கழுவுவதற்க்கு கூட தண்ணீர் இல்லை.

ஆண்டிப்பட்டி தொகுதி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியாகும். அப்படிப்பட்ட தொகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், “ஆண்டிப்பட்டி தொகுதி முக்கியமான தொகுதி என்பதால் தனி கவனம் செலுத்தி வருகிறோம். உறுப்பினர் கூறியதை போல் அங்கு தண்ணீர் பட்சம் கிடையாது. பற்றாக்குறை தான் உள்ளது. இதை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : DMK ,drinking water shortage ,Andipatti ,
× RELATED போதிய மழை இல்லாததால் அவிநாசி வட்டார...