×

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை 5 துணை ஆட்சியர்கள் குழு அமைப்பு கண்காணிப்பு

பல்லாவரம், மார்ச் 19: வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணிக்க, 5 பேர் கொண்ட துணை ஆட்சியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்தார்.தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர், கலெக்டர் ஜான்லூயிஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது.செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 67 பேர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் பரிசோதிக்க பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவர்கள் ஆலோசனைபடி சிலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி துறைகளுக்கும் கூட்டம் நடத்தபட்டு ஆலோசனைகள் வழங்கபட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு சுய சுகாதாரம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கை கழுவ கிருமி நாசினிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவை தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிகப்படுகின்றனர். நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் தனிமையில் வைத்து பரிசோதனை செய்யபடுகின்றனர். வெளிநாட்டில் இருந்து நோய் அறிகுறியுடன் வருபவர்களை கண்காணிக்க ஐந்து துணை மாவட்ட ஆட்சியர்கள் குழு அமைக்கபட்டு மாவட்டம் வாரியாக கண்காணிக்கப்படுகிறது என்றார்.

Tags : Foreigners ,
× RELATED கொரோனா பாதித்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கருணை தொகை