×

சில்வார்பட்டி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

தேவதானப்பட்டி, மார்ச் 19: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில்வார்பட்டி ஊராட்சியில் சாக்கடை சுத்தம் செய்தல், குப்பைகள் உடனடியாக அகற்றுதல், தெருக்கள் தோறும் கொசு மருந்து அடித்தல், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியாக ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் பார்வையிட்டு தூய்மை பணி, சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார். கொசு மருந்து அடிக்கும் பணி சுகாதார ஆய்வாளர் மணிபாரதி தலைமையில் சுகாதார பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Silvarpatti ,
× RELATED திருவில்லிபுத்தூரில் கலர் கோலப்பொடி தயாரிப்பு தீவிரம்