×

தேவதானப்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை

தேவதானப்பட்டி, மார்ச் 19: தேவதானப்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் மின்சாரம் தடைபடுவதால் தூக்கமின்றி பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். வைகை அணை துணை மின் நிலையத்தில் இருந்து ஜெயமங்கலம், சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி உள்ளிட்ட இடங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து ஒரு மாதமாக இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் புழுக்கத்தில் தூக்கமின்றி தவிக்கின்றனர்.

இரவு நேர மின்சாரம் துண்டிப்பு என்பது தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் இரவு 11 மணிக்கு தடை செய்யப்பட்ட மின்சாரம் அதிகாலை 2.15 மணிக்கு வந்தது. இந்த இடைவெளியில் பச்சிளம் குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்கள் வீட்டிற்குள் புழுக்கம் தாங்காமல் குழந்தைகளை தெருக்களில் வைத்து விசிறியால் விசிறி தூங்க வைத்துள்ளனர். இதனால் அனைத்து தெருக்களில் பொதுமக்கள் தூங்காமல் இரவு முழுவதும் தெருக்களில் தூங்கும் நிலை உள்ளது. ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் இரவு நேரத்தில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devadanapatti ,area ,
× RELATED கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல்...