×

ஈரோட்டில் நாளை மின்தடை

ஈரோடு, மார்ச் 19:  ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் திருநகர் காலனி மின்பாதையில் உயர் அழுத்த மின் கேபிள்களை, மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடப்பதால் நாளை (20ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விசிடிவி ரோடு (மல்லிகை அரங்கம்), மாதவக்காடு, சிந்தன் நகர், கமலா நகர், கிருஷ்ணம்பாளையம், கக்கன்நகர், விஜிபி நகர், ஆர்கேவி நகர், ராஜகோபால் தோட்டம், ராம்மூர்த்தி நகர், எம்ஜிஆர் நகர், வண்டியூரான் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை ஈரோடு மின்விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Erode ,
× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...