×

கமுதி பகுதியில் நோய்களை பரப்பி வரும் நாய் பீதியில் பொதுமக்கள்

கமுதி, மார்ச் 19: கமுதியில் உடம்பில் காயம் ஏற்பட்டு நோயுடன் சுற்றித்திரியம் நாய்கள், நோய்களை பரப்பி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கமுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அதிகம் காணப்படுகிறது. நாய்கள் பொதுமக்களையும், குழந்தைகளையும் மிரட்டி வருகிறது.

சாலையில் சண்டை போட்டுக் கொண்டு இருசக்கர வாகன ஒட்டிகள் மீது விழுவதால், அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்புபவர்களும் தெரு நாய்களை கண்டு அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் சில நாய்கள் உடலில் காயங்கள் மற்றும் நோயுடன் காணப்படுகிறது. இவைகள் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. கொடிய நோய்கள் இவைகளிடம் இருந்து உற்பத்தியாகி, தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமியருக்கு கொடிய நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறையினரும் கண்டுகொள்ளாததால், சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Public ,Kamuthi ,
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்ற ஓரிக்கை...