×

96 மதுபாட்டில் பறிமுதல்

திருப்புத்தூர், மார்ச் 19: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் நேற்று மதுபாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டூவீலர் மற்றும் 96 குவார்ட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ நேருதன் தலைலமயில் போலீசார் நேற்று வடக்கு இளையாத்தங்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக டூவீலரில் மூட்டையுடன் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்த போது, அவர் திருப்புத்தூர் அருகே வே.மலம்பட்டியை சேர்ந்த பழனியப்பன்(66) என்பதும் அவர் மலம்பட்டியில் டீ கடை வைத்து தொழில் செய்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவரது டூவீலரில் 96 குவார்ட்டர் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதற்காக கீழச்சிவல்பட்டியில் இருந்து மொத்தமாக வாங்கிச்சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து கிழச்சிவல்பட்டி போலீசார் பழனியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 96 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED காப்பீடு செய்யாத வாகனங்களால் விபத்து...