×

முத்துமாரியம்மன் கோவில் விழா சிறப்பு பேருந்துகள் இயக்கம்

காரைக்குடி, மார்ச் 19: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் சார்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, காளையார்கோவில், இளையாங்குடி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை இரவு, பகலாக சிறப்பு பஸ் இயக்கப்படும் என மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : temple festival ,Muthumariyamman ,
× RELATED 7 மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு...