×

இன்றைய நிகழ்ச்சிகள் மாவட்டம் துருப்பிடித்து கிடக்கும் வாகனங்கள்... அகதிகள் முகாம் பெண் மாயம்

திருமங்கலம், மார்ச் 19: திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவரது மனைவி கெப்திகா(24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமங்கலம் மருத்துவமனைக்கு சென்றுவருவதாக கூறி சென்ற கெப்திகா அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்காததால், ஆஸ்டின்பட்டி போலீசில் விக்னேஷ்வரன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : district ,refugee camp ,
× RELATED ஐரோப்பா அகதிகள் முகாமில் தீ விபத்து...