சங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

சங்ககிரி, மார்ச் 19: சங்ககிரி சந்தைபேட்டையில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்ஐ அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார் திருமுருகன், சந்திரசேகர் ஆகியோருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவர், போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார்(23) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த மஞ்சள் பையை சோதனையிட்ட போது, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் இருந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்,  கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>