இடைப்பாடி நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளில் கிருமி நாசினி தெளிப்பு

இடைப்பாடி, மார்ச் 19: இடைப்பாடி நகராட்சி சார்பில், அனைத்து வார்டுகளில் கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இடைப்பாடி நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். இடைப்பாடி நகர்மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், தாசில்தார் கோவிந்தராஜன், நகர அதிமுக செயலாளர் முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர்கள் தங்கவேலு, நிருபன்சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதி மற்றும் இடைப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Related Stories: