தும்பிபாடியில் சிறப்பு கூட்டம்

காடையாம்பட்டி, மார்ச் 19: காடையாம்பட்டி அருகே தும்பிபாடி ஊராட்சியில் சிறப்பு கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரம்யா சிவா முன்னிலை வகித்தார். இதில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், கடும் வறட்சி நிலவுவதால் தும்பிபாடி ஊராட்சியில் உள்ள தொட்டம்பட்டி ஏரி, நாகலூர் ஏரி, சின்னப்ப ரெட்டி ஏரி, அத்தி குட்டை ஏரி, போடம்மா குட்டை ஏரி என 5 ஏரிகளில் பல ஆண்டாக வறண்டுள்ளன. எனவே, மேட்டூர் உபரி நீர் சரபங்கா இணைப்பு திட்டத்தின் மூலம் இந்த 5 ஏரிகளையும் இணைக்க வேண்டும் என மனு அளித்தனர். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>