விபத்தில் வாலிபர் பலி

சேலம், மார்ச் 19: சேலம் அருகேயுள்ள இளம்பிள்ளை எருமாத்தூரைச்சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(25). தறித்தொழிலாளியான இவர், நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் சேலத்தில் இருந்து இளம்பிள்ளை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சித்தர்கோவில் அய்யன்வளவு என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வரும் வழியில் ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: