×

ராசிபுரம் அருகே ரயில் மோதி இறந்தவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

சேலம், மார்ச் 19:சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும், களங்காணி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று காலை, சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், தண்டவாளத்தில் சடலமாக கிடப்பதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தனர். அதில், தண்டவாளத்தில் சடலம் ஏதும் இல்லை. ஆனால், ரத்தம் படிந்து கிடந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், காரைக்குறிச்சியை சேர்ந்த ராஜூ மகன் சந்திரசேகரன் (37), காலைக்கடனை கழிக்க தண்டவாள பகுதிக்கு வந்தபோது, அவ்வழியே வந்த ரயில் மோதி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை, உறவினர்கள் தூக்கிச் சென்று, போலீசுக்கு தெரியாமல் எரித்ததும் விசாரணையில் தெரிந்தது. இறந்த சந்திரசேகரனின் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசுக்கு தெரியாமல் சடலத்தை எரித்ததாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Body ,railway accident ,Rasipuram ,
× RELATED பட்டுக்கோட்டையில் கொரோனாவால்...