×

துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

ராசிபுரம், மார்ச் 19: ராசிபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.  நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி பங்கேற்று, கொரோனா வைரஸ் பரவும் விதம், தற்காப்பு முறைகள், சுவாச சுகாதாரம், கை சுகாதாரம், கை கழுவும் செயல்விளக்க முறைகள் போன்றவற்றை துப்புரவு பணியாளர்களுக்கு விளக்கினார். இதல் நகராட்சி துப்புரவு அலுவலர் பாலகுமார ராஜூ, துப்புரவு ஆய்வாளர் பாஸ்கரன், மேற்பார்வையாளர் முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் கட்டனாச்சம்பட்டி ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பழனிவேல் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை, துணை தலைவர் லட்சுமி, உறுப்பினர்கள் ராசம்மாள், ஜெகதாம்பாள் கதிர்வேலு, சசிகலா சுப்பிரமணி, மாரியப்பன், சுலோச்சனா, ருக்குமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Corona ,
× RELATED ஊட்டி-கோத்தகிரி சாலை...