×

பள்ளிபாளையம் அருகே காவிரி குடிநீர் குழாய்களை திருடி தோட்டத்தில் பதித்த விவசாயி

பள்ளிபாளையம், மார்ச்19:  பள்ளிபாளையம் அருகே காவிரி குடிநீர்  திட்டப்பணிக்காக, சாலையோரம் போட்டு வைத்திருந்த குழாய்களை திருடி, தோட்டத்தில் பதித்த விவசாயியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். பள்ளிபாளையம் ஒன்றியம், களியனூர் அக்ரஹாரம்  ஊராட்சியில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த  திட்டத்திற்கான ஒப்பந்தாரர் பிவிசி குழாய்களை கொண்டு வந்து எளையாம்பாளையம்  மாரியம்மன் கோயில் அருகே வைத்திருந்தார். கேட்பாரற்று கிடந்த இந்த குழாய்களை, அதே  பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் திருடிச்சென்று, தனது தோட்டத்தில் பதித்துள்ளார்.  குழாய்கள் குறைந்து போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ஒப்பந்ததாரர், அருகில்  உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார்.

இதில் தனசேகரன் என்ற விவசாயி குழாய்களை எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம்  போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதில் குடிநீர் திட்டப்பணிக்காக  வைத்திருந்த 22 குழாய்களை தனசேகரன் திருடிச்சென்று, தனது  தோட்டத்தில் பதித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த எஸ்ஐ அய்யாக்கண்ணு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : Cauvery ,school ,
× RELATED வாகனம் மோதி விவசாயி பலி