×

திருச்செங்காடு அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்செங்கோடு, மார்ச் 19:  திருச்செங்கோடு தாலுகா  எலச்சிப்பாளையம் ஒன்றியம், திம்மராவுத்தன்பட்டியிலிருந்து கணக்கப்பட்டி செல்லும் சாலை முக்கியமான சாலையாகும். டூவீலர்கள், கார்கள்,  வேன்கள், பஸ்கள். லாரிகள்  என்று அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. விவசாய கூலிகள், மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் சாலை இதுவாகும். இந்த தார் சாலை சில வருடங்களாகவே  குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். டூவீலர்களில்  செல்வோர் அடிக்கடி விழுந்து காயம்படுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றபடி புதிய தார்ச்சாலையாக மாற்றித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளனர்.

Tags : Tiruchengadu ,
× RELATED இந்தியாவின் எரிபொருள் தேவை...